வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

பாரம்பரிய மீன் எறியும் திருவிழாவிற்கு வலுக்கும் எதிர்ப்பு

சுவிஸின் சூரிச்சில் நடைபெறும் நூற்றாண்டு பாரம்பரிய மீன் எறியும் திருவிழாவிற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

திருவிழாவின்போது மக்கள் குழுவாக பாரம்பரிய உடையணிந்து, தெருக்களில் அணிவகுப்பு செய்வதோடு மீன்களை கொண்டு குறிவைத்து வீட்டின் பால்கனியிலும், ஜன்னல்களிலும் எறிவதால் பார்வையாளர்கள் மீன்களின் மழையில் நனையவேண்டிய சூழல் ஏற்படும்.

இந்த திருவிழாவில் பயன்படுத்தும் மீன்கள், மீன் உணவு தயாரிக்க பயன்படுத்தப்படுவதாகும்.

மேலும், 25க்கும் அதிகமான குழுக்கள் தெருக்களில் பாரம்பரிய உடையணைந்து இசையுடன் அணிவகுப்பாக செல்வர்.

பின்னர், விழாவின் இறுதியில் பாரம்பரியமாக கடைபிடிக்கப்படும், பூக் எனப்படும் பனியால் ஆன மிகப்பெரிய பனிமனித உருவ சிலைக்கு தீவைத்து குளிர்காலம் முடிவதை கொண்டாடி மகிழ்கின்றனர்.

இந்நிலையில், சூரிச்சின் விலங்குகள் பாதுகாப்பு சங்கம் இந்த கொண்டாட்ட முறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், அந்த கொண்டாட்டத்தில் மீன்களை எறிவதற்கு பதிலாக ஒரு குற்றமற்ற நெறிமுறையை பயன்படுத்த வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது.

மேலும், விலங்குகளை உயிருடன் அல்லது இறந்த நிலையில் இவ்வாறு செய்வது ஏற்றுகொள்ளமுடியாதது, கேவலமானது மற்றும் அவமானபடுத்தும் செயல் என்றும் தெரிவித்துள்ளதோடு, இந்த பழக்கத்தினை 2015ம் ஆண்டு முதல் தடை செய்யவேண்டும் என பொலிசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
 
மற்றைய செய்திகள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக