சனி, 21 செப்டம்பர், 2013

ஐ.நா முன்பாக தீக்குளித்த ஈழத்தமிழர் பரிதாப சாவு


சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள ஐநா மனித உரிமை அலுவலகம் முன்பு செந்தில்குமரன் ரத்தினசிங்கம் எனும் ஈழத்தமிழர் தீக்குளித்து உயிரிழந்தார்.

அங்குள்ள மூன்று நாற்காலி சின்னத்துக்கு அருகில் வியாழனன்று அதிகாலை 1.10 மணிக்கு தனக்குத் தானே தீயிட்டுக்கொண்ட அவர், படுகாயம் அடைந்தார்.
அப்போது, அங்கு மாதக்கணக்கில் தொடர் போராட்டம் நடத்திக்கொண்டு இருந்த ஈரானியர்களின் உதவியுடன் உள்ளூர் பொலிசார், செந்தில்குமரனை மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர், லௌசான் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி மாலை 4.15 மணிக்கு உயிரிழந்தார்.
சுவிசின் சியோன் பகுதியில் குடியிருந்துவந்த செந்தில்குமரனுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அமைதியான சுபாவம் கொண்ட இவர், கடைசியாக, தந்தை ரத்தினசிங்கத்திடம் பேசியுள்ளார்.

அப்போது, தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம் என்று குறிப்பிட்டு இணைப்பைத் துண்டித்துக்கொண்டதாக அவர்களின் வீட்டருகில் வசிக்கும் சிவலோகனன் என்பவர் தெரிவித்துள்ளார்.

இதே ஐநா முன்றலில், 2009 பிப்ரவரி 13ம் நாளன்று, ஈழப்போரைத் தடுக்கக்கோரி ஈழத்தமிழரான முருகதாஸ் தீக்குளித்து இறந்தது குறிப்பிடத்தக்கது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக