சனி, 30 நவம்பர், 2013

ரயில் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த பெண்

சுவிட்சர்லாந்தில் பெண்மணி ஒருவர் குடித்துவிட்டு கார் ஓட்டுகையில் ரயிலின் மீது மோதி விபத்திற்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார்.

ஆப்டின்கன் மாநகராட்சியில் இந்த சம்பவமானது நடைபெற்றுள்ளது. சம்பவம் நடைபெற்ற அன்று இப்பெண்மணி தனது ஜிபிஎஸ் கைப்பேசியின் வழிகாட்டுதலின் படி தன்னுடைய வீட்டிற்கு வழி தேடி சென்றுள்ளார்.

அப்போது இவருடைய கார் ரயில்வே தண்டவாளங்களில் திடீரென சிக்கி கொண்டது. பின்னர் தன் காரை வெளியே எடுக்கையில் எதிரே வந்த ரயிலின் மீது மோதியது.

இந்த விபத்தில் காருக்கு ஏற்பட்ட சேதத்தினை சரிசெய்ய 20,000 பிராங்குகள் தேவைப்படும் என்றும் ஆனால் ரயிலுக்கு பெயிண்ட் மட்டுமே அடிக்க நேரிடும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இப்பெண்ணின் ஓட்டுனர் உரிமம் பறிமுதல்  செய்யப்பட்டுள்ளது..
http://navatkirinew.blogspot.ch/



0 கருத்துகள்:

கருத்துரையிடுக