சனி, 30 நவம்பர், 2013

கார்ட்டூன் படங்களுடன் வேலை தேடும் விசித்திர நபர்

சுவிட்சர்லாந்தில் வாலிபர் ஒருவர் வேலை தேடும் நிறுவனங்களுக்கு தனது பயோடேட்டாவை கார்ட்டூன் படங்கள் போன்று அனுப்பி அவர்களை கவர்ந்துள்ளார்.

லூசேன் கேண்டனில் வசிப்பவர் டரிக்லாலா(29). இவர் தனது கல்வித்தகுதி மற்றும் வேலை அனுபவத்தை 12 கார்ட்டூன் படங்களாக கைப்பேசி மூலம் சித்தரித்து அதை தனது சான்றிதழ்களுடன் இணைத்து வேலைவாய்ப்ப்பு மையங்களுக்கு அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இதற்காக நான் இரண்டரை நாள் செலவிட்டேன். முதல் அரை நாளில் பயோடேட்டாவிற்கு ஏற்ற கார்டூன் படங்களை சேகரித்து கொண்டேன்.

பின்னர் அடுத்த அரைநாளில் அதை போட்டோஷாப் மூலம் டிசைன் செய்து அழகு படுத்தி,இறுதியில் அதை என் பயோடேட்டாவுடன் அனுப்பினேன் என்றும் இதை அனுப்பியபின் தினமும் ஒரு நேர்முகத் தேர்வு அழைப்பு கடிதம் எனக்கு வந்த வண்ணம் உள்ளது என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக