சுவிட்சர்லாந்தில் சிறை மேலதிகாரியான ஜார்ஜெஸ் என்பவர் விலைமாது ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சுவிசின் Thornberg சிறைச்சாலையில் கடந்த 2011ம் ஆண்டு முதல் மேலதிகாரியாய் பதவி வகித்த ஜார்ஜெஸ் காக்கிவியோ என்பவர் பல விலைமாதுகளுடன் தொடர்பு கொண்டிருந்தார்.
இந்நிலையில் விலைமாது ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்பு இருப்பதை அச்சிறைச்சாலையில் இருக்கும் கைதி நன்கு அறிந்த காரணத்தால் தன்னை பற்றிய விவரங்கள் அம்பலமாகிவிடுமோ என்ற பயத்தில் இவ்வழக்கு பற்றி இருந்த ஆவணங்களின் தாள் ஒன்றை கிழித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
மேலும் குற்றத்தை மறைத்து தன்னை காப்பாற்றி கொள்வதற்காகவே காக்கிவியோ இச்செயலை செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து Hans-Jurg Käser என்ற பெர்ன் பொலிஸ் தலைமை அதிகாரி கூறுகையில், விலைமாதுடன் காக்கிவியோக்கு தொடர்பு இருந்தது தனக்கு முன்பே தெரியும் என்றும் இனி காக்கிவியோ பதவி வகிக்க இயலாது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் காக்கிவியோ கடந்த 3ம் திகதி பதவி விலகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே ஓவியனான அக்கைதி தன்னை பற்றிய தகவல்களை பரப்பகூடாது என்ற எண்ணத்தில் சிறை அதிகாரி காக்கிவியோ, கைதிக்கு 790 பிராங்குகளை லஞ்சமாக கொடுத்ததுடன், அவன் வங்கி கணக்கிலும் பணம் போட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன

0 கருத்துகள்:
கருத்துரையிடுக