சுவிட்ஸர்லாந்தின் மிகச் சிறிய பொது நூலகம் ஒன்று, அங்குள்ள பழைய தொலைபேசி பூத் ஒன்றை மாற்றியமைத்ததன் உருவாக்கப்பட்டுள்ளது.
சுவிட்ஸர்லாந்தைச் சேர்ந்த மேக்ஸ் ஃபுக்ஸ், தன்னிடம் இருந்த பழைய பயன்படாத தொலைபேசி பூத் ஒன்றை இவ்வாறு மாற்றியமைத்துள்ளார்.
இதுபற்றி மேக்ஸ் ஃபுக்ஸ் கூறுகையில், இந்த நூலகத்தை கட்டுமானம் செய்ய எனக்கு இரண்டரை நாட்கள் எடுத்தது, நான் இந்த முயற்சியை எடுத்ததை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்.
தீயணைப்பு வீரர்களின் அறையை பார்த்து ஈர்க்கப்பட்டே நான் இதை செய்ய தொடங்கினேன்.
என்னிடம் இருந்த பழைய தொலைபேசி பூத்தை புதிதாக சிவப்பு வர்ணம் பூசியும், பின்னர் நான் ஏற்கனவே பலமுறை படித்த புத்தகங்களை அடுக்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்து ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க திட்டமிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நூலகம் தற்போது நல்ல பிரபலம் அடைந்ததுடன், பழைய புத்தகங்களை மக்கள் எடுப்பதற்கு எதிலும் பதியவேண்டிய அவசியமில்லை, நூலக அட்டை தேவையில்லை, கால அவகாசம் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றைய செய்திகள்