சுவிசில் மூதாட்டி ஒருவர் தனது முதிர்ச்சியையும் பொருட்படுத்தாமல் நீச்சலிட்டு அனைவரையும் அசத்தியுள்ளார்.
சுவிசின் லென்ஸ்பெர்க் நகரில் வசிக்கும் ஹிடில்கர் ஹோஸ்லர் என்ற 90 வயது மூதாட்டி,சிறுமி ஒருவரது பிறந்தநாள் விழாவில் கலந்துக்கொண்டுள்ளார்.
அப்போது அங்கிருந்த 50 மீற்றர் அளவு நீச்சல்க்குளத்தில் சற்றும் அவதி ஏதும் இல்லாமல் நன்றாக நீச்சலடைந்து காட்டியுள்ளார்.
இதை பார்த்த அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.மேலும் அந்த விழாவை தலைமை தாங்கிய நபர் இவருக்கு பரிசுகளை அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனது சிறு வயது முதல் எனக்கு நீச்சலடிப்பதில் மிகுந்த ஆர்வம் என்றும் ஜிம்னாஸ்டிக்ஸ், குடைப்பந்து உள்ளிட்ட பல விளையாட்டுகளில் நான் பங்கேற்றுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.
மற்றைய செய்திகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக