சுவிட்சர்லாந்தில் 30 ஆண்டுகளாக பயிற்சியில் இருந்துவந்த 77 வயது போலி மருத்துவருக்கு தற்போது நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
சுவிஸில் Vidoje “Willy” Peric என்ற செர்பியாவை பூர்விகமாக கொண்டு சுவிஸில் குடியுரிமை பெற்று வாழ்ந்துவரும் மருத்துவர், பெல்கிரேட் ராணுவ அகாடமியில் பட்டம் வாங்கியதாக கூறிய போதிலும் அதன் அசல் பிரதி சான்றிதழை அவர் சமர்பிக்கவில்லை.
அவரிடம் மருத்துவம் தொடர்பாக சோதனை நடத்திய சுவிஸ் நிபுணர்கள், அவர் அதில் தோல்வியடைந்ததை அடுத்து, அவருக்கு தெருவில் நடக்கும் சாதாரண மனிதருக்கு தெரிந்த அளவுக்கு கூட மருத்துவம் தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த போலி மருத்துவரிடம் சிகிச்சைக்காக வந்த ஜேர்மனியைச் சேர்ந்த நோயாளிக்கு இவர் சுகாதாரம் இல்லாத ஊசியை பயன்படுத்தியால், அவரது ரத்தத்தில் விஷம் கலந்ததாகவும் கூறப்படுகிறது.
77 வயதாகும் அந்த போலி மருத்துவர் சுவிஸில் கடந்த 30 ஆண்டுகளாக மருத்துவராக செயல்பட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், அவரை தற்போது கைது செய்து டிசினோ மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளனர். அங்கு அவருக்கு வயதின் காரணமாக 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர் மருத்துத் துறையில் 3 ஆண்டுகள் பணியாற்றக் கூடாது என்று நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
ஆனால் அவர் ஏற்கனவே 170 நாட்களை தடுப்பு காவலில் கழித்துவிட்டதால் அவர் சுதந்திர மனிதனாக வெளியே வந்துவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக