புதன், 3 டிசம்பர், 2014

காலவரையற்ற வேலைநிறுத்தம்: அச்சத்தில் பொதுமக்கள்

சுவிஸின் ஜெனிவாவில் உள்ள பொது போக்குவரத்து ஊழியர்கள், சென்ற மாதம் நடத்திய ஒரு நாள் வேலை நிறுத்தத்தை போல மீண்டும் வேலைநிறுத்தம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜெனிவாவில் உள்ள பேருந்து, ஸ்டீரிட் கார் போன்ற பொது போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் இதுபற்றி தெரிவிக்கையில், வரும் வியாழக்கிழமை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடபோவதாக தெரிவித்துள்ளனர்.

தங்கள் கோரிக்கைகளை ஜெனிவா போக்குவரத்து ஆணையமும், மண்டல அதிகாரிகளும் ஏற்கவில்லையெனில் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, சிக்கன வரவு செலவுத் திட்டம் என்ற பெயரில் 100 பேரின் வேலைகளை 3 ஆண்டுகளுக்கு குறைக்கவுள்ளதாக வந்த அறிவிப்பை அடுத்து கடந்த நவம்பர் 19ம் திகதி 24 மணி நேர வேலைநிறுத்தத்தில் போக்குவரத்து ஊழியர்கள் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இரண்டு பக்க பிரதிநிதிகளின் இடையே நடக்கவுள்ள விவாதங்கள் வரும் செவ்வாய் அன்று நடக்கும் என்று கூறப்படுகின்றது.

மேலும், போக்குவரத்து ஊழியர்களின் இந்த வேலைநிறுத்தத்தால் பொது மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக