சனி, 18 ஜனவரி, 2014

மனிதநேயத்தின் சிகரம் சுவிஸ்

சுவிட்சர்லாந்தில் சட்டத்திற்கு புறம்பாக வாழ்ந்து வந்த பெண் ஒருவருக்கு மனிதாபிமான அடிப்படையில் தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஈகுவேடார் நாட்டை சேர்ந்த நெல்லி வெலன்சியா என்பவர் தன் நாட்டில் பொருளாதார சரிவு மற்றும் சமூக நெருக்கடியின் காரணமாக வேலை ஏதும் கிடைக்காமல் போனதால் கடந்த 1999ம் ஆண்டு சுவிஸ் நாட்டிற்கு குடிபெயர்ந்துள்ளார்.

தன் குழந்தைகளை ஈகுவேடாரின் தலைநகரம் குய்டோ மாகாணத்தில் இருக்கும் வளர்ப்பு குடும்பத்தினர் ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு சுவிஸில் வீட்டு வேலைகள் செய்து பிழைப்பு நடத்திவந்தார்.

இந்நிலையில், இவரது குழந்தைகளை, அந்த குடும்பத்தினர் கொடுமைப்படுத்துவதாக வந்த செவி வழி செய்தியை அறிந்த அவர் பதட்டத்துடன் விரைவாக குய்டோவிற்கு சென்று குழந்தைகளை அவர்களிடமிருந்து மீட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து கடந்த 2003ம் ஆண்டு இவர் அந்நாட்டில் தங்குவதற்கான முறையான விசா அனுமதி பெறாமல் சட்டத்திற்கு புறம்பாக பணிபுரிகிறார் என பொலிசாரால் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.

மேலும் இவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இவர் தன் மீது தொடரப்பட்ட வழக்கை மேல் முறையீடு செய்தார். இதனையடுத்து மத்திய நிர்வாக நீதிமன்றம் கடந்த 2010ம் ஆண்டு இடம்பெயர்தல் பற்றி மறு ஆய்வு செய்யுமாறு மத்திய அலுவலகத்திற்கு உத்தரவிட்டது.



 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக