சனி, 18 ஜனவரி, 2014

நூலகத்தை கொளுத்திய இளம் பெண்கள் சிறையிலடைப்பு

சுவிட்சர்லாந்தில் மத்திய நூலகத்தை தீயிட்டு கொழுத்திய இரு பெண்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு ஜனவரி 20ம் திகதி லுசேன் நகரத்தில் உள்ள பொது நூலகம் ஒன்றில் 20 வயது பெண் ஒருவரும் 22 வயதுடைய பெண்ணும் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.
அப்போது நூலகத்தின் பாதுகாப்பு பெட்டகத்தை பலமுறை திறக்க முயன்றும் இயலாததால் கோபமுற்று காகிதம் மற்றும் எழுது பொருள் வைக்கப்பட்டிருந்த அறையை தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.
இத்தீவிபத்தில் ஒரு லட்சத்திற்க்கும் மேற்பட்ட புத்தகங்கள் சாம்பலாகின மற்றும் 1.5 மில்லியன் பிராங்குகள் சேதமடைந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து பொலிசார் விசாரணை மேற்கொண்டதில், இவர்களது வருகையானது நூலகத்தில் இருந்த காணொளி கமெராவில் பதிவாகியுள்ளது, இதன் உதவியால் அவர்கள் இருவரையும் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான வழக்கில் கைதான 20 வயது பெண் முன்பே திருட்டுவழக்குகளில் சம்பந்தப்பட்ட நபராக பொலிசாரால் கருதப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பொது சொத்தை அழித்த குற்றத்திற்காக அவருக்கு 3 வருட சிறைதண்டனையும், அவருடன் வந்த பெண் திருடருக்கு 2 வருட சிறைதண்டனையும் வழங்கி குற்றவியில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக