ஞாயிறு, 5 ஜனவரி, 2014

சுவிஸ் மருத்துவ ஊழியர் சிரியாவில் மாயம்

சுவிஸ் நாட்டைச் சேர்ந்த முதலுதவி மருத்துவ ஊழியர் ஒருவர் சிரியா நாட்டில் மர்மமான முறையில் மாயமாகியுள்ளார்.

சிரியாவில் நடக்கும் போரில் ஏராளமான மக்கள் இறப்பதோடு மட்டுமல்லாமல் மருத்துவசிகிச்சை இல்லாமலும் திண்டாடிவருகின்றனர்.
இந்நிலையில் MSF என்ற அமைப்பைச் சேர்ந்த ஊழியர்கள் 5 பேர் சிரியாவிற்கு சென்றுள்ளனர். அவர்கள் 5 பேரில் ஸ்வீடன், டென்மார்க், பெரு, பெல்ஜியம் மற்றும் சுவிஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவார்.

உதவியளிக்க சென்ற இவர்களை திடீரென காணவில்லை. இதுகுறித்து MSF அமைப்பு கூறுகையில். முகம்தெரியாத கும்பலால் இவர்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் இந்த ஊழியர்களின் வயது, விபரம் ஏதும் அறியப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.
இந்த MSF அமைப்பிற்கு சிரியாவில் 6 மருத்துவமனைகளும், 4 சுகாதார மையமும் உள்ளது. இதன் மூலம் சிரியா அகதிகளுக்கு மருத்துவ உதவிகளை செய்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக