சனி, 18 ஜனவரி, 2014

இணையதள தேர்வில் அவதிக்குள்ளான சூரிச் பல்கலைக்கழகம்

சுவிஸின் சூரிச் பல்கலைகழகத்தில் இணையதள தேர்வை எழுத வந்த நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு இணையதளத்தில் சர்வர்(Server)பிரச்சனை நேர்ந்ததால் தேர்வு எழுத முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகினர்.

கடந்த 13ம் திகதி சூரிச் பல்கலைகழகத்தில் முதலாம் ஆண்டு பயிலும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ”Introduction to Law” என்ற பாடத் தேர்வை எழுத சென்றுள்ளனர்.
இத்தேர்வு தொடங்கிய 11 நிமிடங்களிலேயே இணையதள சர்வர் (Server) பிரச்சினை நேர்ந்தது இணையதளமும் மிக மெதுவாக செயல்பட தொடங்கியது.

இதனால் மாணவர்கள் தேர்வை மேற்கொள்ள இயலாமல் பெரும் பிரச்சனைக்குள்ளாகியுள்ளனர்.
எனினும் இதுவரை தேர்வு எழுத இயலாமல் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது துல்லியமாக தெரியவில்லை என Neue Zürcher Zeitung (NZZ) என்ற செய்தித்தாள் தகவல்களை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் மீண்டும் மறுதேர்வு பற்றி கலந்துரையாடியதில் வரும் 15ம் திகதி முதல் 17ம் திகதி வரை நடத்தப்படும் என பல்கலைகழக அதிகாரிகள் தீர்மானித்தனர்.

இதுகுறித்து பல்கலைகழக அதிகாரிகள் கூறுகையில், மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 780 என்றும் இவர்களுக்கு தேர்வில் 90 நிமிடங்கள் அவகாசம் அளிக்கப்பட்டு, மாறுபட்ட கேள்விகள் வேவ்வேறு வரிசையில் கேட்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் முன்பு சரியாக தேர்விற்கு தன்னை தயார் படுத்திகொள்ளாத மாணவர்கள் இச்சந்தர்பத்தை நன்கு பயன்படுத்திகொள்ளலாம் என பல்கலைகழக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக