சுவிஸ் நாட்டில் முதியவர் ஒருவருக்கு துப்பாக்கி சூடு நடத்திய வழக்கில் 10 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சுவிஸின் ஜெனிவா நகரத்தில் 80 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் தன் மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.
இவர் வசிக்கும் குடியிருப்பிற்கு வெளியே எதிர்புறத்திலிருக்கும் இரவு விடுதியில், வாரத்தின் ஏழு நாட்களிலும் ஓசையுடன் கூடிய இசையும் “டிஸ்கோதே” நடனமும் நடந்து வந்துள்ளது.
தனது மனைவி நோயுற்று இருப்பதால் தாங்கள் இச்சத்தால் பெரும் அவதிக்குள்ளாவதாக பலமுறை விடுதியை சேர்ந்தவர்களிடம் முதியவர் எடுத்துரைத்துள்ளார்.
ஆனால் இதை செவி கொடுத்து கேளாத விடுதியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முதியவரின் வீட்டின் மீது கற்களை வீசியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த முதியவர் விடுதியினர் மீது தாறுமாறாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
இதில் விடுதியை சேர்ந்த ஒருவரது வயிற்றில் குண்டு பாய்ந்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்
இதனையடுத்து முதியவரின் மீது தொடரப்பட்ட வழக்கில் 10 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அப்போது முதியவரின் சார்பில் வாதாடிய ஜெனிவாவின் தலைமை வழக்கறிஞர், முதியவரின் தண்டனை காலம் குறைக்கப்பட வேண்டும் என்றும் முதியவரின் வேண்கோளை விடுதியினர்
பெருட்படுத்தவில்லை, பொலிசாரும் பெரிதாக எடுத்துகொள்ளாததால் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது என கூறியுள்ளார்.
இருந்த போதிலும் முதியவரின் தண்டனை காலம் குறைக்கப்படவில்லை.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக