ஞாயிறு, 25 மே, 2014

விலை குறைவில் விற்பனையாகும் வீடுகள்

சுவிட்சர்லாந்தில் வீடுகள் மற்றும் மனைகளின் வேலைகள் கடந்த ஆண்டை விட 6 சதவிகிதம் குறைந்துள்ளது.
சுவிஸின் ஜெனிவா நகரில் கடந்த ஆண்டுகளாக விலை அதிகமாயிருந்த வீடுகள், வில்லாக்கள் மற்றும் மனைகளின் விலை இந்த ஆண்டு 6 சதவிகிதம் குறைந்துள்ளது.
லேக் ஜெனிவா பகுதியில் சராசரியாக 2.4 சதவிகிதம் விலைகள் குறைந்துள்ளது. மேலும் பெர்ன் மற்றும் செயிண்ட் கலன் பகுதியில் விலைகள் 2 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
ஜெனிவா பகிதியில், 80 சதவிகித மக்கள் வாடகை வீடுகளில் உள்ளனர். ஆனால் இந்த பகுதியில் ஏற்பட்ட விலை குறைவால் இவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.
சுவிஸ் அரசு மற்றும் தேசிய வங்கி கடந்த வருடங்களில் ஏற்பட்ட விலை உயர்வினால் பெரும் நடவடிக்கைகளை எடுத்தது என்பது குறிப்பிடதக்கது.

திங்கள், 19 மே, 2014

அதிரடியாய் மாறும் சுவிஸ் குற்றாவாளிகளை எதிர்போம்!

  குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுகின்றவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு வாழ்நாள் தடை விதிக்க சுவிட்சர்லாந்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வாழ்நாள் தடை விதிக்கும் புதிய மசோதாவிற்கான நேற்று நடந்த வாக்கெடுப்பில், இந்த சர்ச்சைக்குரிய நடவடிக்கைக்கான தீர்ப்பிற்கு, அந்நாட்டின் மக்கள் தொகையில் 63.5 சதவீதம் பேர் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
இந்த முடிவு, குழந்தை பாலியல் குற்றவாளிகளுக்கு எதிரான கடுமையான சட்ட விதிகளை, சுவிஸ் நாட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் செயல்படுத்த வழி வகுத்துள்ளது.
இதற்காக அந்நாட்டில் பாடுபட்டு வந்த ஒயிட் மார்ச் சங்கம் கூறுகையில், பத்து வயதுக்குட்பட்டவர்களிடம் தகாத முறையில் நடந்து கொள்பவர்களுக்கு குறைந்த பட்சம் ஆறு மாத சிறைதண்டனை மட்டுமே விதிக்கப்படுவதாகவும், இது கடுமையாக்கப்படவேண்டும்.
மேலும் ஒரு 20 வயது இளைஞன் 16 வயதுக்குட்பட்டவர்களிடம் தவறாக நடந்துகொண்டாலும், ஆபாசத்தை தூண்டும்விதமான பரிமாற்றங்களில் ஈடுபட்டாலும், புதிய சட்டத்தின் மூலம் அவன் தண்டிக்கப்படவேண்டும் என கூறியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பின் சாதகமான முடிவு குறித்து ஒயிட் மார்ச் சங்கத்தின் தலைவர் கிறிஸ்டின் பசட் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
இதனைதொடர்ந்து சுவிஸ் நாடாளுமன்றம் பாலியல் குற்றவாளிகளுக்கு எதிரான ஐரோப்பாவின் கடுமையான சட்டங்களை இயற்றவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

சுவிஸில் சொக்லேட் சரிவை நோக்கி..

 சொக்லெட்டின் மூல பொருளான கொக்கோவின் உற்பத்தி குறைந்ததால் வருங்காலத்தில் சுவிஸில் சொக்லெட்டின் உற்பத்தி குறையும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
புகழ்பெற்ற கொக்கோ மற்றும் சொக்லெட் தயாரிப்பு நிறுவனம் இந்த ஆய்வை நடத்தியதில், சுவிஸில் தற்போது ஒரு சராசரி மனிதன் ஒரு வருடத்திற்கு 50 கிராம் சொக்லெட்கள் சாப்பிடுவதாகவும், மேலும் இதைவிட கூடுதலாக 50 கிராம் முதல் 2 கிலோ வரை சாப்பிட்டால் அதிக பற்றாக்குறை ஏற்படும் என தெரிவித்துள்ளது.
தற்போது தொடர்சியாக இரண்டாவது வருடத்தில் இவ்வாறு பற்றாக்குறை ஏற்படுவதாகவும், மேலும் சர்வதேச கொக்கோ அமைப்பு உலகில் உற்பத்தி 4.104 மில்லியனாக உயரும் என தெரிவித்துள்ளது.
பாரி கலெபெட் நிறுவனம் கொக்கோவின் உற்பத்தி வரும் 2020ம் ஆண்டிற்குள் 5 மில்லியன் உயர வேண்டும் என தெரிவித்துள்ளது.
பிற ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் ஒரு சராசரி மனிதன் ஒரு வருடத்திற்கு பத்து முதல் 12 கிலோ வரை சொக்லெட் சாப்பிடுகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.
 

சனி, 17 மே, 2014

கமெரா ரகசியங்கள் அம்பலம்: அபராதத்தின் பிடியில்

  சுவிசில் ஸ்பீட் கமெரா தகவல்களை பேஸ்புக்கில் வெளியிட்ட பெண் ஒருவருக்கு 1000 பிராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் நெடுஞ்சாலைகளின் போக்குவரத்து சிக்னலும், நகரத்தின் போக்குவரத்து சாலைகளிலும், சாலை விதிகளை மீறி அதிவேகத்தில் செல்லுவோரை கண்காணிக்கும் ஸ்பீட் கமெராக்களை போக்குவரத்து துறையினர் பொருத்தியுள்ளனர்.
இந்த கமெராக்கள் நகரின் எந்தெந்த இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது என பிரபல சமூக வலைத்தளமான “பேஸ்புக்கில்” வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து பொலிசார் கூறுகையில், 2013ம் ஆண்டு சட்டத்தின் படி இந்த முக்கிய தகவல்களை அனுமதியின்றி வெளியிடுவது குற்றமாகும்.
இதற்கு போக்குவரத்து துறையும் நெடுஞ்சாலைத்துறையும் அனுமதி அளிக்க வேண்டும்.
அவ்வாறு அனுமதி இல்லாது சமூக வலைத்தளங்களில் இத்தகவல்களை வெளியிடுவது குற்றமாகும்.
எனவே இக்குற்றத்தை செய்த பெண்ணுக்கு 1000 பிராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
மேலும் இதேபோல் சமூக வலைத்தளங்களில் அனுமதியின்றி பிரசுரிக்கும் நபர்களை தாங்கள் ஸ்கேன் செய்து வருவதாக பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது
 

வெள்ளி, 9 மே, 2014

ஓட்டுநர்களை திக்குமுக்காட வைக்கும் டிராபிக் !

சுவிசில் போக்குவரத்து நெரிசலால் ஓட்டுநர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சுவிஸ் மத்திய அரசின் நெடுஞ்சாலை அலுவலகம் நேற்று முன் தினம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில், போக்குவரத்து நெரிசலால் நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டுநர்கள் தங்களது வாகனங்களின் மூலம், சுமார் 26 பில்லியன் கிலோ மீற்றர்கள் கூடுதலாக பயணிக்க வேண்டிய நிர்பந்ததில் உள்ளனர்.
இதனால் கடந்த 2012ம் ஆண்டில் 1.7 சதவீதமாய் இருந்த போக்குவரத்து நெரிசல், கடந்தாண்டில் 3.7 சதவீதமாக அதிகரித்து நெடுஞ்சாலை பயணிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் நெடுஞ்சாலை வாகன ஓட்டுநர்கள் தங்களது பெரும்பாலான நேரத்தை போக்குவரத்திலேயே செலவிடும் நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே இப்பிரச்சையை சமாளிப்பதற்காக ஜெனிவா விமானநிலையத்திலிருந்து வெர்கான் பகுதி வரையிலும் நெடுஞ்சாலை போக்குவரத்து பணிகள் தொடங்கப்படவுள்ளது.
இதனைதொடர்ந்து இந்த பணிகள் லுசெனிலுள்ள கிரைசியர், சூரிச்சிலுள்ள வின்டர்து மற்றும் லுட்டர்பீச் உள்ளிட்ட பகுதிகளிலும் நடைபெறவுள்ளது.
 

சனி, 3 மே, 2014

பயங்கரமாக மனைவியை கொன்றதால் ஆயுள் தண்டனை

சுவிட்சர்லாந்தில் மனைவியை வெறித்தனமாக கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் உள்ள பிரிபர்க் என்ற இடத்தில், 47 வயதுள்ள கணவன் 40 வயதுள்ள தந்து மனைவியுடனும், இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தான்.
அவன் தனது வேலையை இழந்தவுடன் குடிக்கி அடிமையாகி மன அமைதியை இழந்து, தனது மனைவியிடம் வாக்குவாதங்களிலும், சண்டைகளிலும் ஈடுபட்டு, தந்து மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, சித்திரவதை செய்து அடித்து துன்புறுத்தியுள்ளான்.
ஒரு நாள் வெறிபிடித்தவன் போல் மனைவியிடம் சண்டைபோட்டு விட்டு, மனைவியை தனது கைகளாலேயே கழுத்தை நெறித்து, கத்தியால் குத்தியும், வேட்டை துப்பாக்கியால் சுட்டும் கொன்றுள்ளான்.
சிறிது நேரத்திற்கு பிறகு, இரண்டு பெண் குழந்தைகளும், இவனிடம் அம்மா எங்கே என்று கேட்ட பொழுது, வேளியே வேலையாக சென்று இருப்பதாக கூறிவிட்டான்.
தனது அறையிலேயே, மனைவியின் பிணத்தை வைத்துப் பூட்டி விட்டு, குழந்தைகளுக்கு தெரியாமல் ஒரு நாள் முழுவதும் மறைத்துவிட்டான்.
மறுநாள் அவனது மனசாட்சி குத்தவே, அவனே பொலிஸ் நிலையத்தில் சரணடைந்து, பொலிஸ் அதிகாரியிடம், ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தவுடன் நீதிமன்றம் அவனுக்கு 15 வருடங்கள் கடுங்காவல் தண்டனையை அளித்தது.
தற்போது அவன் 4 வருடங்களாக சிறையிலேயே உள்ளான். அவனது இரண்டு பெண் குழந்தைகளும் அனாதை ஆசிரமத்தில் உள்ளனர்.
இந்நிலையில், இவருக்கு, நீதிமன்றம் ஆயுள் தண்டனையைத் தீர்ப்பாக அளித்துள்ளது.