குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுகின்றவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு வாழ்நாள் தடை விதிக்க சுவிட்சர்லாந்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வாழ்நாள் தடை விதிக்கும் புதிய மசோதாவிற்கான நேற்று நடந்த வாக்கெடுப்பில், இந்த சர்ச்சைக்குரிய நடவடிக்கைக்கான தீர்ப்பிற்கு, அந்நாட்டின் மக்கள் தொகையில் 63.5 சதவீதம் பேர் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
இந்த வாழ்நாள் தடை விதிக்கும் புதிய மசோதாவிற்கான நேற்று நடந்த வாக்கெடுப்பில், இந்த சர்ச்சைக்குரிய நடவடிக்கைக்கான தீர்ப்பிற்கு, அந்நாட்டின் மக்கள் தொகையில் 63.5 சதவீதம் பேர் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
இந்த முடிவு, குழந்தை பாலியல் குற்றவாளிகளுக்கு எதிரான கடுமையான சட்ட விதிகளை, சுவிஸ் நாட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் செயல்படுத்த வழி வகுத்துள்ளது.
இதற்காக அந்நாட்டில் பாடுபட்டு வந்த ஒயிட் மார்ச் சங்கம் கூறுகையில், பத்து வயதுக்குட்பட்டவர்களிடம் தகாத முறையில் நடந்து கொள்பவர்களுக்கு குறைந்த பட்சம் ஆறு மாத சிறைதண்டனை மட்டுமே விதிக்கப்படுவதாகவும், இது கடுமையாக்கப்படவேண்டும்.
மேலும் ஒரு 20 வயது இளைஞன் 16 வயதுக்குட்பட்டவர்களிடம் தவறாக நடந்துகொண்டாலும், ஆபாசத்தை தூண்டும்விதமான பரிமாற்றங்களில் ஈடுபட்டாலும், புதிய சட்டத்தின் மூலம் அவன் தண்டிக்கப்படவேண்டும் என கூறியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பின் சாதகமான முடிவு குறித்து ஒயிட் மார்ச் சங்கத்தின் தலைவர் கிறிஸ்டின் பசட் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
இதனைதொடர்ந்து சுவிஸ் நாடாளுமன்றம் பாலியல் குற்றவாளிகளுக்கு எதிரான ஐரோப்பாவின் கடுமையான சட்டங்களை இயற்றவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக