ஞாயிறு, 29 ஜூன், 2014

திக்கித் திணறப் போகும் மக்கள் கோடைகாலத்தில்

 சுவிட்சர்லாந்தில் கோடை கால விடுமுறையை முன்னிட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என எதிர்பார்க்கபடுகிறது.
சுவிஸ் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கோடை காலத்தை முன்னிட்டு பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை தொடங்கவுள்ளது. இதனை அடுத்து ஜெனிவா மற்றும் க்ராபண்டன் உள்ளிட்ட மாகாணத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சுவிஸின் மத்திய போக்குவரத்து அலுவலகம், சுவிஸிலிருந்து இத்தாலி வரை செல்லும் உலகின் மிகப்பெரிய சுரங்கப்பாதையான கோத்தார்ட் சுரங்கபாதை விடுமுறை நாட்களில் நெரிசலுடன் காணப்படும் என தெரிவித்துள்ளது.
மேலும், யூலை மாதத்தில் அனைத்து வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் 16.9 கி.மீ நீளம் உள்ள இந்த சுரங்கப்பாதையை பயன்படுத்தும் அனைவரும் போக்குவரத்து நெரிசலில் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த வார இறுதியில் கோடைகால இசை நிகழ்ச்சிகளான ஒபன் ஆர் பெஸ்டிவல், செயிண்ட் கேலன், தீ ட்ரகர், இண்டர்லெகன் மற்றும் ஏராளமான நிகழ்ச்சிகள் இருப்பதால் வாகன ஓட்டுநர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகுவார்கள் என்பது குறிப்பிடதக்கது.
 

குடித்து விட்டு கார் ஓட்டியதில் நேர்ந்த விபத்து

சுவிட்சர்லாந்தில் இளைஞர் ஒருவர் குடித்து விட்டு கார் ஓட்டியதில் ஏற்பட்ட விபத்தில் மூன்று நபர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
சுவிஸின் சர்மன்ஸ்டோர்ஃப் நகரில் 21 வயது நபர் ஒருவர் குடித்துவிட்டு மூன்று நபர்களுடன் காரில் சென்றுள்ளார். அப்போது அங்குள்ள பாறை ஒன்றின் மீது மோதி கார் கவுந்துள்ளது.
இதனை அடுத்து அந்த மூன்று நபர்களும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். காரின் ஓட்டுநர் விபத்து பகுதியில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.
விபத்துக்கு காரணம் மது அருந்திவிட்டு காரை வேகமாக ஓட்டியதே காரணம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
 

செவ்வாய், 24 ஜூன், 2014

நளை யாழில் சுவிஸ் தூதுவர் முக்கிய சந்திப்புக்களில்

பிவிருத்தி, மற்றும் வடக்கு நிலைமைகள் குறித்து ஆராயும் நோக்கில் இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் நாளை யாழ்ப்பாணம் வருகிறார்.

யாழ்ப்பாணம் வரும் இவர் வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறியை அவரது அலுவலகத்தில் நாளை காலை சந்திப்பார் என்றும், அதன் பின்னர் யாழ்.அரச அதிபரைச் சந்தித்துக் கலந்துரையாடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிற்பகல் 2 மணியளவில் வடக்கு மாகாண முதலமைச்சரையும் சுவிஸ் தூதுவர் சந்தித்துக் கலந்துரையாடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது

வெள்ளி, 6 ஜூன், 2014

கருத்தடை மாத்திரையால் வாழ்விழந்த பெண்

சுவிட்சர்லாந்தில் பெண் ஒருவர் கருத்தடை மாத்திரை உட்கொண்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் மருந்து நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சுவிஸின், சூரிச் நகரத்தை சேர்ந்த செலின் ப்லெகர் (22). இவர் 5 வருடங்களுக்கு முன்பு ஜேர்மனி மருத்துவ நிறுவனம் பேயர் தயாரித்த யாஸ்மீன் என்ற கருத்தடை மாத்திரை உட்கொண்டதால் நுரையீரல் அடைப்பு ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் இவர் பெற்றோர்கள் 5.3 மில்லியன் நஷ்ட ஈடு கேட்டு வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஆனால் சூரிச் மாகாண நீதிமன்றம் மாத்திரை உட்கொண்டதற்கு எந்தவித ஆதரமும் இல்லை எனக் கூறி வழக்கை நிராகரித்தது.
இந்நிலையில் தற்போது CSS காப்புறுதி நிறுவனம் செலின்க்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.
இதுகுறித்து CSS நிறுவனத்தின் இயக்குனர் கொலடெரெலா கூறுகையில், நீதிமன்றம் வழக்கை தீவிரமாக வீசாரிக்கவில்லை என்றும், இதுபோன்று பல்வேறு பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் யாஸ்மீன் என்ற இந்த மருந்தால் அமெரிக்காவில் 10,000க்கும் அதிகமான நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

புத்தம் புது பூங்காவில் யானைகள்

சுவிட்சர்லாந்தில் உள்ள பூங்காவில் யானைகளுக்கு புதிதாக வீடுகள் அமைத்து தரப்போவதாக பூங்காவின் நிர்வாகி கூறியுள்ளார்.
சுவிஸில் வரும் சனிக்கிழமை அன்று 6 யானைகளுக்காக கெங் க்ரேசான் என்ற பூங்கா திறக்கப்படவுள்ளது. அதில், 11,000 சதுர பரப்பளவும், யானைகள் நீச்சல் அடிக்க 6 நீர் கலங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
ஆசிய யானைகளை பாதுகாப்பதற்காகவும், யானைகளுக்கு ஏற்ற இயற்கை சூழ்நிலைகள் அமைத்துதரப்பட்டுள்ளது.
இதற்காக 57 மில்லியன் பிராங்க் செலவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு 5500 நபர்கள் மற்றும் சமூக அமைப்புகள் நன்கொடை கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
 

"பளார்" கொடுத்த கணவர்: 3 ஆண்டு சிறை

 சுவிசில் பெண் ஒருவரது கன்னத்தில் அவரது கணவர் பலமாக அறைந்ததால் அவர் பரிதாபமாய் உயிரிழந்துள்ளார்.
சுவிசின் லென்ஸ்பெர்க் (Lenzburg) மாகாணத்தில் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு தம்பதியர் ஒருவர் வசித்து வந்தனர்.
கடந்த 2008ம் ஆண்டு மனைவியை கணவன் கடுமையாக தாக்கியதுடன், அவளது கன்னத்தில் ஓங்கி அடித்துள்ளான்.
இதில் கேட்கும் திறனை இழந்த அவரது மனைவி, சுமார் மூன்று ஆண்டுகளுக்கு பின் கடந்த 2011ம் ஆண்டு யூலை மாதம் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் வெறும் தற்செயலாக நடந்தது என இவ்வழக்கை லென்ஸ்பர்க் நீதிமன்றம் நிறைவு செய்திருந்தது.
ஆனால் அப்பெண்ணின் மரணம் குறித்து கதறி அழும் அவளது பெற்றோர், தங்கள் மகளின் இறப்பிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர் .
இதனையடுத்து மீண்டும் நீதிமன்ற விசாரணைக்கு வந்த இவ்வழக்கில், அந்த பெண்ணின் கணவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது