புதன், 18 டிசம்பர், 2013

ரயில் மோதிசுவிட்சர்லாந்தில் இரு சகோதரிகள் பலி

சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் இரு சகோதரிகள் உயிரிழந்துள்ளனர்.
சுவிஸ் தலைநகர் பெர்ன் இரயில் நிலையத்தில் எதிர்பாரதவிதமாய் இந்த விபத்தானது நடந்துள்ளது.
இதுகுறித்து பொலிசார் கூறுகையில், இச்சகோதரிகள் 33 மற்றும் 32 வயது நிரம்பியவர்கள், ஜெசிவா செயிண்ட் கேலன் என்ற இரயில் பேர்ன் அருகில் வந்தபோது ஓட்டுனரால் எவ்வளவு முயன்றும் இரயிலை நிறுத்த இயலாததால் இவ்விறுவரின் மீது மோதியுள்ளது.

இதனைத் தொடர்ந்து இவ்விருவரின் சடலங்கள் இரயில் நிலையத்தின் அருகே இருக்கும் கால்பந்தாட்ட மைதானத்தில் அவசர மீட்பு பணி தொழிலாளர்களால் கண்டெடுக்கப்பட்டது.

மேலும் இச்சம்பத்தினால் ஜெசிவா செயிண்ட் கேலன் ரயிலில் பயணித்த பல்லாயிரக் கணக்கான பயணிகள் வேறு இரயிலுக்கு மாற்றப்பட்டனர் மற்றும் உள்ளூர் இரயில்கள் ரத்துசெய்யப்பட்டது.
இதுகுறித்து தகவல்கள் ஏதும் தெளிவாகவில்லை என்பதால் தீவிர விசாரணையை பொலிசார் மேற்கொண்டுள்ளனர் மற்றும் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்தவர்கள் 031-634-41-11 என்ற எண்ணை தொடர்ப்பு கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளனர்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக