செவ்வாய், 17 டிசம்பர், 2013

சுரங்கப்பாதையில் பயணித்த நபருக்கு தண்டனை

சுவிட்சர்லாந்தில் பொதுமக்களுக்கு இன்னும் திறந்து விடப்படாத சுரங்கப்பாதையின் வழியாக காரை ஓட்டிக் கொண்டுபோன நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேசல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதை இன்னும் ஒரிரு நாட்களில் திறக்கப்படவுள்ளது.
இந்நிலையில் 50 வயதான வாகன ஓட்டுனர் ஒருவர் இந்த சுரங்கப்பாதையில் குடித்துவிட்டு கார் ஓட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய பொலிசார் அவரது வாகன உரிமையை இடைக்கால ரத்து செய்துள்ளனர்
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக