சுவிஸ் நாட்டில் வாழும் பிரெஞ்சுக்காரர்கள் முதலைக் கறியை கடத்துகையில் பிடிபட்டுள்ளனர்.
பேசல் மாகாண கடற்கரையில், 16 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்டுள்ள மிருகங்களின் இறைச்சியுடன், பிரான்ஸிலிருந்து சுவிட்சர்லாந்திற்குக் கடத்திக் கொண்டு வருகையில், இந்தப் பிரெஞ்சுக்காரர் பிடிபட்டுள்ளனர்.
பேசல் மாகாண கடற்கரையில், 16 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்டுள்ள மிருகங்களின் இறைச்சியுடன், பிரான்ஸிலிருந்து சுவிட்சர்லாந்திற்குக் கடத்திக் கொண்டு வருகையில், இந்தப் பிரெஞ்சுக்காரர் பிடிபட்டுள்ளனர்.
சுங்க இலாகா அதிகாரிகள் இவர்களின் வாகனத்தை சோதனையிட்டதில், காரின் பின் பகுதியில் ஒரு சூட்கேசில் உள்ள பிளாஸ்டிக் பைகளில் ஒரு பாம்பின் தலைப்பகுதியும், 9 துண்டுகளாக்கப்பட்ட முதலைக்கறி இறைச்சிகளும் சுற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.
விசாரணைக்குப் பிறகு, இந்த இறைச்சிகள் மத்திய மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கேமரூன் நாட்டிலிருந்து கடத்தி வந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
உடனே சுங்க இலாகா அதிகாரிகள், இந்த மிருகங்களின் இறைச்சிகளை பறிமுதல் செய்தனர்.
மக்களின் உணவுப் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு, இந்த அபாயகரமான நச்சுத்தன்மை, நிறைந்த உணவு வகைகளை யாரும் தெரியாமல் உட்கொள்ளக் கூடாது என்ற காரணத்தினால், இதை சுகாதார நலன் கருதி அழித்து விட கட்டளையிடப்பட்டுள்ளது.
கேமரூனில் முன்பு வாழ்ந்தவர்கள், தற்போது சுவிட்சர்லாந்தில் குடிபுகுந்த போதிலும் ஆப்பிரிக்காவில் தாங்கள் சாப்பிட்ட மேற்கு ஆப்பிரிக்க, இவ்வகையான மிருக இறைச்சிகளை சாப்பிட விருப்பத்துடன் இந்த முதலைக்கறிகளையும், பாம்புக் கறிகளையும் கடத்தி வருவதாக விசாரணையில் சுங்க அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர்.