செவ்வாய், 8 ஏப்ரல், 2014

எல்லையில்லாமல் போகும் கரடியின் அட்டகாசம்

சுவிசின் உயிரியல் பூங்காவில் தந்தை கரடி மீண்டும் மற்றொரு குட்டியை கொன்றது பெரும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
சுவிஸ் தலைநகர் பெர்னில் உள்ள உயிரியல் பூங்காவில் மிஷா, மாஷி கரடிகளுக்கு கடந்த ஜனவரி 15ம் திகதி இரண்டு ஆண் கரடி குட்டிகள் பிறந்தது.
இதில் தந்தை கரடியான மிஷா கடந்த 3ம் திகதியில் தனது குட்டியை தூக்கி போட்டு விளையாடி கொண்டிருக்கையில் எதிர்பாரதவிதமாக அக்குட்டி கிழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இந்நிலையில் நேற்று மற்றொரு கரடி குட்டியையும், தந்தை கரடி அதேபோல் விளையாடி கொன்றுள்ளது.
இதனால் பூங்காவின் மேலாளர்கள் வனவிலங்கு துறையினர்களால் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து வனவிலங்கு அதிகாரிகள் கூறுகையில், முதலில் இக்கரடி தனது குட்டியை கொன்ற போதே பூங்காவின் மேலாளர்கள் அதனை தனிமைப்படுத்திருக்க ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும் என்றும் அவர்களது அலட்சியமே இந்த இரண்டாம் கரடி குட்டியின் உயிரிழப்பிற்கு வழிவகுத்துள்ளது எனவும் கடுமையாக கூறியுள்ளனர்.
மேலும் பெர்ன் உயிரியல் பூங்காவில் விலங்குகளுக்கான போதிய வசதிகள் ஒன்றும் இல்லை என வனவிலங்கு துறையினர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக