சுவிட்சர்லாந்தில் கடந்த 2012ம் ஆண்டு நடந்த பேருந்து விபத்து தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் திகதி Sierre and Sion நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது.
சுவிட்சர்லாந்தில் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் திகதி Sierre and Sion நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது.
இதில் பயணம் செய்த 22 குழந்தைகள் உட்பட 28 பேர் மரணம் அடைந்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்திய குழுவினர், பேருந்து ஓட்டுநரின் உடல்நலம் சரியில்லாததால் ஏற்பட்ட கவனக்குறைவே விபத்துக்கு காரணம் என தெரிவித்தது.
இந்நிலையில் விசாரணையின் முடிவில் திருப்தியடையாத பெற்றோர்கள், மீண்டும் விசாரணை நடத்தக் கோரி கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே இறந்து போன தனது கணவரின் மீது குற்றம் சுமத்துவது வேதனை அளிப்பதாக உள்ளது என ஓட்டுநரின் மனைவி தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக