வெள்ளி, 18 ஏப்ரல், 2014

வங்கியின் இரகசிய கணக்குகளை குறிவைத்த அமெரிக்கா ?

 சுவிட்சர்லாந்திலுள்ள கிரெடிட் ஆசி வங்கியின் இரகசியக் கணக்குகளை அமெரிக்க வங்கி கட்டுப்பாட்டு நிறுவனம் கேட்டுள்ளது.
நியூயோர்க் வங்கிக்கட்டுப்பாட்டு நிறுவனம், கிரெடிட் ஆசியின் பங்கு விவகாரங்களில் ஏற்பட்டுள்ள வரி ஏய்ப்பினைக் கண்டுபிடிக்க ஆய்வு செய்யும் நோக்கத்துடன், கிரெடிட் ஆசியின் முக்கிய ஆவணங்களை உடனே சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, Benjamin lawsky என்ற நியூயோர்க் வங்கிக் கட்டுப்பாட்டு மேலதிகாரி, நிதி சேவையைக் கண்காணிக்கும் வகையில், கிரெடிட் ஆசி வங்கியின் பயணப் பதிவுகள் செலவு செய்ததற்காக பதிவுகள், திகதியின் படியுள்ள கலெண்டர் ஆவணங்கள் போன்றவற்றை சோதனையிட்டுள்ளார்.
Benjamin lawsky என்ற அமெரிக்க வங்கிக் கட்டுப்பாட்டு மேலதிகாரி கிரெடிட் ஆசி வங்கியிடமிருந்து, 22000 அமெரிக்க பங்குதாரர்களின் பங்கு ஆவணங்கள் ( 12 பில்லியன் டொலர்கள் பெறுமானமுள்ள பங்குகள்) கேட்டுள்ளார்.
ஆனால் கிரெடிட் ஆசி வங்கி இதுவரை ஆவணங்களைச் சமர்ப்பிக்கவில்லை. ஆகவே கிரெடிட் ஆசி வங்கி 780 மில்லியன் டொலர்களை அமெரிக்க வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டிய காலகட்டத்தில் உள்ளது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக