புதன், 9 ஏப்ரல், 2014

சுவிசில் மனைவி மீது குண்டு வீசிய கணவன்

 மனைவி மீது குண்டு வீசிய கணவனின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிசின் ஆர்கு மாகாணத்தில் உள்ள போஸ்னிய நாட்டை சேர்ந்த 55 வயது நிரம்பிய நபர் கடந்த 6ம் திகதி தனது மனைவி (59) மீது குண்டு வீசியுள்ளான்.
இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்பெண்ணின் வயிற்றில் குண்டு வெடித்து சிதறிய பொருட்களை, பார்த்த மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை அளித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பொலிசார், நேற்று அப்பெண்ணின் கணவரை இத்தாலிய நாடு எல்லைப்பகுதியில் மடக்கி பிடித்துள்ளனர்.
இதுகுறித்து இந்நபரிடம் நடத்திய விசாரணையில், இக்குண்டு யூகோஸ்லாவியாவில் தயாரிக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.
எனினும் எந்த காரணத்திற்காக இந்த கொலை முயற்சி சம்பவம் அரங்கேறியது என்பது தெரியாததால் பொலிசார் இந்நபரிடம் தொடந்து தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக