சுவிசில் சுற்றுலா பயணிகளுக்கு உதவும் வழிகாட்டி ஒருவர் பனிப்பாறைபிளவினால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சுவிசின் வாலிஸ் மாகாணத்தில் உள்ள மலைப்பகுதியில் 2 சுற்றுலா பயணிகளுடன் சென்ற வழிகாட்டும் நபர் ஒருவர் ஆல்ப்ஸ் மலை ஏற முயன்றுள்ளார்.
சுவிசின் வாலிஸ் மாகாணத்தில் உள்ள மலைப்பகுதியில் 2 சுற்றுலா பயணிகளுடன் சென்ற வழிகாட்டும் நபர் ஒருவர் ஆல்ப்ஸ் மலை ஏற முயன்றுள்ளார்.
அப்போது நேர்ந்த பனிப்பாறை பிளவினால் சுமார் 20 மீற்றர் உயரத்திலிருந்து எதிர்பாரவிதமாய் கிழே விழுந்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் இவரை மீட்டு செல்வதற்கு முன்பே, இவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்தாண்டில் இதுபோல் வழிகாட்டி இறக்கும் சம்பவம் மூன்றாவது முறையாக நடப்பதாக கூறப்படுகிறது.
இதேபோல் 28 வயது மிக்க மலைப்பகுதி வழிகாட்டி ஒருவர் கடந்த ஜனவரி மாதம் பனிச்சரிவினால் இறந்தது குறிப்பிடதக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக